Connect with us

Raj News Tamil

ஐபிஎல்: சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்!

விளையாட்டு

ஐபிஎல்: சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் அணித்தலைவர் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ரவீந்திரா 12 ரன்களுடனும் கெய்க்வாட் 26 ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் கை கோர்த்த துபே – ரஹானே இணை சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது.

இவர்களில் அதிரடியாக விளையாடிய துபே அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ரஹானேவும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜடேஜா 31 ரன்கள் குவிக்க, மறுமுனையில் டேரில் மிட்செல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 1 ஓட்டம் மட்டுமே எடுத்தார்.

இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷபாஸ் அகமது, உடன்கட், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை சென்னை பந்துவீச்சை சிதறடித்தது.

24 பந்துகளை எதிர்கொண்ட ட்ராவிஸ் ஹெட் 31 ரன்களில் வெளியேற, சர்மாவுடன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 12 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட சர்மா 37 ரன்களில் வெளியேறினார்.

மார்க்ரம் 36 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஷஹ்பாஸ் அகமது, கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்க, 18.1 ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது. 11 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top