Connect with us

Raj News Tamil

அமீர் – வெற்றிமாறன் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சினிமா

அமீர் – வெற்றிமாறன் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை படத்தில், ராஜன் என்ற கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார். அன்று இணைந்த இவர்கள், தற்போது பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

சமீபத்தில் கூட, அமீர் நடித்திருந்த மாய வலை என்ற படத்தை, இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட உள்ளார். இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைந்துள்ளது.

அதாவது, வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் கதை எழுதியுள்ள இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்குநர் அமீர் இயக்க உள்ளார்.

கரு பழனியப்பன், அசார் ஆகியோர் நடித்துள்ள இப்படம், அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

More in சினிமா

To Top