Connect with us

Raj News Tamil

காஸா மீதான இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து!

உலகம்

காஸா மீதான இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து!

கடந்த 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் 1400 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1000-த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்நிலையில் காஸாவில் தொடர்ந்துவரும் போரால் 10 லட்சம் குழந்தைகள் உயிர் பாதுகாப்பற்ற சூழலில் இருந்துவருவதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ உதவிகள் கிடைக்காமலும், உரிய மருந்துகள் மற்றும் உணவுகள் கிடைக்காமலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தொடர் தாக்குதால் 50 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் தவித்து வருவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

More in உலகம்

To Top