Connect with us

Raj News Tamil

ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கொண்டாட்டம்!

தமிழகம்

ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறுபான்மையின பிரிவு சார்பில் கச்சேரி மற்றும் பல்வேறு தொண்டர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் விழா மலரை வெளியிட்டார்.

தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்தபின், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்பாட்டில் தயாரான 76 கிலோ கேக் வெட்டப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், இலக்கிய அணி சார்பில் அருகில் உள்ள மண்டபத்தில் 1076 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மதிய உணவு அளிக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top