Connect with us

Raj News Tamil

“அவர் ஒரு துரோகி.. 10% கமிஷன் வாங்குறியா..” – அட்லியை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

சினிமா

“அவர் ஒரு துரோகி.. 10% கமிஷன் வாங்குறியா..” – அட்லியை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தையடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை எடுத்திருந்தார். தற்போது, பாலிவுட்டுக்கு சென்றுள்ள அட்லி, ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பிகில் படத்தை இயக்கியபோது, ஜூனியர் நடிகர்களிடம் இருந்து, அட்லி 10 சதவீதம் கமிஷன் வாங்கியதாக, பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சாடியுள்ளார். அதாவது, அதிரடி கருத்துக்களின் மூலம், சமூக வலைதளங்களில் கவனம் பெற்றவர் கே.ராஜன். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டபோது, உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நீ எவ்வளவு பெரிய இயக்குநராக வேண்டுமானாலும் இரு.. தயாரிப்பாளரிடம் 40 கோடி சம்பளம் வாங்குற.. அவுட்டோர் யூனிட்ல, ஜூனியர் நடிகர்களிடம் 10 சதவீதம் கமிஷன் வாங்குற..

இதெல்லாம் நியாயமா?.. இந்த பணம் உனக்கு நிக்குமா.. அதனால் தான் நீ எடுத்த ரெண்டு படமும் Flop ஆயிடிச்சு.. உன்னோட ஒரு வீட்டையும் வித்துட்ட..” என்று கடும் ஆவேசமாக பேசியுள்ளார். இயக்குநர் அட்லியை, கே.ராஜன் இவ்வாறு கோபமாக சாடியுள்ள வீடியோ, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top