Connect with us

Raj News Tamil

வசூலில் லால் சலாம் படத்தை பின்னுக்கு தள்ளிய லவ்வர்..!!

சினிமா

வசூலில் லால் சலாம் படத்தை பின்னுக்கு தள்ளிய லவ்வர்..!!

ஜெய் பீம் பிரபலம் மணிகண்டன் நடித்த லவ்வர் படம் கடந்த 9ம் தேதி வெளியானது. அதே நாளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படமும் வெளியானது.

இதில் லால் சலாம் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. லவ்வர் திரைப்படம் முதல் நாளை விட இரண்டாம் நாளில் வசூல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மணிகண்டன் நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் உருவான லவ்வர் திரைப்படம் முதல் நாளில் 1 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாம் நாளில் 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் 4.3 கோடியாக இருந்த நிலையில், 2ம் நாளில் வெறும் 3 கோடி ரூபாயாக வசூல் சரிவடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top