Connect with us

லியோ படத்தின் வசூலுக்கு வந்த இன்னொரு ஆபத்து! பீதியில் படக்குழு!

சினிமா

லியோ படத்தின் வசூலுக்கு வந்த இன்னொரு ஆபத்து! பீதியில் படக்குழு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு, விஜயும், லோகேஷ் கனகராஜ்-ம் இணைந்துள்ள திரைப்படம் லியோ. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம், அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் வசூலுக்கு ஆபத்து ஒன்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படம் ரிலீஸ் ஆகும் அதே மாதத்தில் தான், கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளதாம்.

இதுமட்டுமின்றி, லியோ ரிலீஸ் ஆகும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, இந்தியாவுக்கும், வங்காள தேசம் அணிக்கும் இடையே விறுவிறுப்பான லீக் போட்டி நடைபெற உள்ளதாம்.

இதன்காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், அந்த போட்டிக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள். இதனால், இப்படத்தின் வசூலில், சிறிய பாதிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல், விஜய் ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top