Connect with us

லியோ பாடல் செய்த புதிய சாதனை!

சினிமா

லியோ பாடல் செய்த புதிய சாதனை!

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில், விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 22-ஆம் தேதி அன்று வெளியானது.

பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடல், ரசிகர்களை ரிப்பீட் மோடில் கேட்க வைத்தது.

என்னதான் வரவேற்புகள் கிடைத்தாலும், போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இப்பாடல் அமைந்துள்ளதாக கூறி சிலர் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இவ்வாறு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து, Youtube-ல் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த பாடல், 5 கோடி பார்வையாளர்களை பெற்று, பெரும் சாதனையை படைத்துள்ளது.

லிரிக்கல் வீடியோவாக வெளியாகி, குறுகிய காலத்திலேயே 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பது, இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இதனை விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More in சினிமா

To Top