Connect with us

Raj News Tamil

லோகேஷ் கனகராஜின் புதிய முயற்சி – ரசிகர்கள் வாழ்த்து!

சினிமா

லோகேஷ் கனகராஜின் புதிய முயற்சி – ரசிகர்கள் வாழ்த்து!

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி',மாஸ்டர்’, விக்ரம்',லியோ’ என இயக்கிய அனைத்துப் படங்களுமே ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக Most wanted இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் இவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனது புதிய முயற்சியாக G-squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு அளித்த அதே ஆதரவை தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். லோகேஷின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top