Connect with us

Raj News Tamil

“மேட்ச் பாக்க வந்த மோடி.. இந்தியா தோத்துடிச்சு” – பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய மம்தா!

இந்தியா

“மேட்ச் பாக்க வந்த மோடி.. இந்தியா தோத்துடிச்சு” – பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிய மம்தா!

2023-ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை, நரேந்திர மோடி மைதானத்தில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது.

இந்த போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த சம்பவத்தில் பல்வேறு தரப்பினர், பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஒருசிலர், பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்திய அணி வெற்றி பெற்றால், அதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது என்றும், ஆனால், அந்த வியூகம் தவறிவிட்டது என்றும் கூறினர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில், கட்சி தொண்டர்களை சந்தித்து, உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், உலகக் கோப்பை இறுதி போட்டியை கொல்கத்தா அல்லது மும்பையில் நடத்தியிருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என்று கூறியிருந்தார்.

மேலும், இந்திய விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், பாவம் செய்தவர்கள் பார்வையாளர்களாக வந்ததால் தான், இறுதிப் போட்டியில் மட்டும் இந்தியா தோற்றுப் போனது என்றும் கூறினார்.

More in இந்தியா

To Top