Connect with us

கொத்தாக சிக்கிய குரங்கு கூட்டம்…! கூண்டோடு பிடித்த வனத்துரையினர்…!

தமிழகம்

கொத்தாக சிக்கிய குரங்கு கூட்டம்…! கூண்டோடு பிடித்த வனத்துரையினர்…!

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் குரங்குகள் அட்டகாசம் பெருகி வருகிறது.

தெருக்களில் ஹாயாக சுற்றித் திரியும் இந்த குரங்குகள் தினமும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்லும் பொதுமக்களை துரத்துவதாகவும், இதனால் குழந்தைகள் பயந்து அலறி அடித்து ஓடுவதாகவும் கூறப்படுகின்றன.

மக்கள் வெளியே நிம்மதியாக செல்ல முடியவில்லை என்பதுடன், இந்த குரங்குகளுக்கு பயந்து குழந்தைகளும் தெருவில் விளையாட பயப்படுவதாகவும் கூறப்பட்டன.
]
பொதுமக்களை பலவகைகளில் அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வெண்டும் எனவும் மக்கள் புகார் அளித்தனர்.

புகார்களின் அடிப்படையில், பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் காந்தி நகர், நேரு நகர், கஸ்தூரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கூண்டுகளை வைத்து, குரங்குகளை பிடித்தனர்.

முதல் நாள் 3 கூண்டுகள் வைக்கப்பட்டதில், ஒரு கூண்டிலும் எந்த குரங்கும் சிக்கவில்லை… 2வது கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளும், 3-வது கூண்டில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகளும் வந்து சிக்கின.

2-வது நாள் மொத்தமாக 26 குரங்குகள் பிடிபட்டன… மொத்தமாக 70-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கின.
இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு, வனத்துறையினர் குரங்குகளை சித்திரவதை செய்வதாக தவறாக சித்தரிக்கப்பட்டன.

இதை அறிந்த வனத்துறையினர் குரங்குகளைப் பிடித்து நாங்கள் பாதுகப்பாக காட்டில் விட்டுவிட்டோம் என விளக்கம் அளித்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top