Connect with us

Raj News Tamil

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முத்து, ஆளவந்தான் – வசூலில் முந்தியது யார் தெரியுமா??

சினிமா

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முத்து, ஆளவந்தான் – வசூலில் முந்தியது யார் தெரியுமா??

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்’. இதில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதே போல கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முத்து’. இப்படத்தில் ரஜினி, மீனா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

முத்து, ஆளவந்தான் இந்த இரண்டு படங்களுமே கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. இரண்டு திரைப்படங்களும் வெளியான நாள் முதலே ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றன.

படம் வெளியான முதல் 3 நாட்கள் முடிவில் ஆளவந்தான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.15 லட்சம் வசூல் செய்துள்ளது. முத்து திரைப்படம் ரூ.7 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More in சினிமா

To Top