Connect with us

Raj News Tamil

சந்தேகமே இல்லை; உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி: ரிக்கி பாண்டிங்!

விளையாட்டு

சந்தேகமே இல்லை; உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி: ரிக்கி பாண்டிங்!

உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்தார்.

இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில், உலகிலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை நான் நீண்டகாலமாக கூறிவருகிறேன

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை, அந்த சாதனையை முறியடிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

விராட் கோலியின் ஒட்டுமொத்த பேட்டிங் சாதனையை பார்க்கும்போது அது நம்பமுடியாத அளவில் உள்ளது.

விராட் கோலி 49-வது சதம் விளாசிவிட்டார். சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்துவிட்டார் என்பதை நினைத்துப்பார்க்கும்போது நம்பமுடியவில்லை’ என்றார்.

More in விளையாட்டு

To Top