Connect with us

Raj News Tamil

பிசிசிஐ வெளியிட்ட மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை!

விளையாட்டு

பிசிசிஐ வெளியிட்ட மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை!

கிரிக்கெட் தொடர்களில் மிகவும் பிரபலமானது ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள்.
மகளிர் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

முதலாவது மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் வரும் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த முறை தொடர் பெங்களூரு மற்றும் டெல்லியில் நடைபெற உள்ளது.

கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் பங்கேற்று வெற்றிபெற்ற அணி இறுதிபோட்டியில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in விளையாட்டு

To Top