Connect with us

Raj News Tamil

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:

விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழ் திரையுலகின் சாதனையாளர், தனது திறமையான நடிப்பு மூலம் லட்சக்கணக்கானவர்களின் மனங்களை கவர்ந்தார். அரசியல் தலைவராக தமிழகத்தின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அதனை நிரப்புவது கடினம்.

அவர் நெருங்கிய நண்பராக இருந்தார். பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.

More in தமிழகம்

To Top