Connect with us

Raj News Tamil

கோல்டன் டிக்கெட் பெற்ற ரஜினி காந்த் !கௌரவித்த பி.சி.சி.ஜ !

சினிமா

கோல்டன் டிக்கெட் பெற்ற ரஜினி காந்த் !கௌரவித்த பி.சி.சி.ஜ !

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்ததையடுத்து , தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இவர் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வெளிவரவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா நடிகர் ரஜினிக்கு வழங்கி கௌரவித்தாா் .

இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top