Connect with us

Raj News Tamil

மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்க தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்க தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

“மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் எனது கவனத்துக்கு வந்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்துக்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம் தமிழக அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும்” என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

More in தமிழகம்

To Top