Connect with us

Raj News Tamil

பெண்களுக்கு ரூ.12,000; விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10,000: பாஜக தேர்தல் வாக்குறுதி!

இந்தியா

பெண்களுக்கு ரூ.12,000; விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10,000: பாஜக தேர்தல் வாக்குறுதி!

ராய்பூரில் மாநில கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சத்தீஸ்கா் 2023-க்கான மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பிலான பாஜக தோ்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:

திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதி யுதவி அளிக்கப்படும்.

சத்தீஸ்கரில் 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு காலி பணி யிடங்கள் நிரப்பப்படும்.

ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும்.

கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு, பயணப்படி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத் தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 2 ஆண்டுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்.

தீன்தயாள் உபாத்யாய் கிரிஷி மஜ்தூர் திட்டத்தின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

கிரிஷி உன்னதி திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் தலா ரூ.3,100-க்கு கொள்முதல் செய்யப்படும்.

அயோத்தியில் ராமர் கோயிலை பார்வையிட மக்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது.

More in இந்தியா

To Top