Connect with us

விஜய்க்கு போட்டியாக நடனமாடும் சூர்யா

சினிமா

விஜய்க்கு போட்டியாக நடனமாடும் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கும் படம் கங்குவா. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்நிலையில் கங்குவா படத்தின் பாடல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது,நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களை வைத்து மிகவும் பிரமாண்டமான முறையில் கங்குவா படத்தின் பாடல் எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித் தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைத்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான லியோ படத்தின் பாடலும், இதே போல் பிரமாண்டமான முறையில் தான் எடுக்கப்பட்டிருந்தது. அந்த பாடலை கங்குவா பாடல் முந்துமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More in சினிமா

To Top