Connect with us

Raj News Tamil

ஆணவ கொலையை எதிர்த்து போராடும் சூர்யா..!

சினிமா

ஆணவ கொலையை எதிர்த்து போராடும் சூர்யா..!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்று, தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, திருமணம் முடிந்து ரெஜிஸ்டெரேஷன் ஆபீசிலிருந்து வெளியே வரும் தம்பதியை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கும்.

அவர்களிடமிருந்து தம்பதியை, சூர்யா காப்பாற்றுவது போன்று இந்த சண்டைக்காட்சி அமைந்திருக்கும். ஆணவகொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த காட்சி, படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top