Connect with us

Raj News Tamil

உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் ஹீரோ காலமானார்..!

சினிமா

உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் ஹீரோ காலமானார்..!

1983ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கங்கா.

கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி (1986) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மிகவும் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் 63 வயதான கங்காவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். மேலும் இவரின் இறுதி சடங்குகள், அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

More in சினிமா

To Top