Connect with us

Raj News Tamil

விஜய் OK சொன்ன தளபதி 68ன் டைட்டில்..?

சினிமா

விஜய் OK சொன்ன தளபதி 68ன் டைட்டில்..?

வெங்கட் பிரபு இயக்கத்தில் ,விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தளபதி 68. இதன் ஃபா்ஸ்ட் லுக் வருகிற புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டில், Boss அல்லது puzzle என்று இருக்கும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால், இது இரண்டுமே இல்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறினார். இதன் பிறகு, GOAT (GREATEST Of All Time ) எனும் தலைப்பு வைத்துள்ளனர் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து GOAT எனும் ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர்.

ரசிகர்கள் கொண்டாடிய இந்த டைட்டிலுக்கு தற்போது விஜய்யும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top