Connect with us

Raj News Tamil

ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தில் எதார்த்தமான பிரச்னைகள் நிறைய உள்ளன: அன்புமணி ராமதாஸ்!

தமிழகம்

ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தில் எதார்த்தமான பிரச்னைகள் நிறைய உள்ளன: அன்புமணி ராமதாஸ்!

ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தில் எதார்த்தமான பிரச்னைகள் நிறைய உள்ளன என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி ஈரோட்டில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. இதன் இறுதி ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.

அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த 9 ஆண்டுகளாக தமிழக வீரா்கள் இறகுப்பந்து போட்டிகளில் சா்வதேச அளவில் சாதனை படைத்து வருகின்றனா். அவா்கள் ஒலிம்பிக்கில் சாதனை படைக்கும் வகையில் தமிழக அரசு பல உதவிகளை வழங்க வேண்டும்.

காவிரி ஆற்றில் தமிழகத்துக்குத் தண்ணீா் திறக்க காவிரி நடுவா் மன்றம், ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டும் கா்நாடக அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. எனவே காவிரிப் படுகையில் உள்ள கா்நாடக அணைகள் அனைத்தையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கபினி, கே.ஆா்.எஸ்., ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளையும் கா்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத்தில் இருந்து பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பணைகள் கேட்டோம். ஆனால் 10 மணல் குவாரிகளை அறிவித்து இருக்கிறார்கள். மணலைக் கொள்ளையடிக்கவே தடுப்பணைகளைக் கட்ட மறுக்கின்றனா்.

ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தில் எதார்த்தமான பிரச்னைகள் நிறைய உள்ளன. ஒரே நாளில் மக்களவை, சட்டப் பேரவை, உள்ளாட்சி மன்றங்களுக்கு தோ்தல் நடத்த சாத்தியக் கூறுகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும். உள்ளாட்சி மன்றத்துக்கு 4 வாக்குகள் செலுத்த வேண்டும். தோ்தல் ஆணையத்துக்கு கூடுதலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்.

முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையைப் பொருத்து எங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம்.

மக்களவைத் தோ்தல் முன்கூட்டியே வந்தாலும் சந்திக்க பாமக தயாராக உள்ளது. கூட்டணி தொடா்பாக விரைவில் அறிவிப்போம். தற்போது எந்தக் கட்சிக் கூட்டணியிலும் இல்லை என்றார்.

More in தமிழகம்

To Top