Connect with us

Raj News Tamil

சவுதி அரேபியாவில் துணிவு படத்திற்கு தடை..காரணம் இதுதான்..!

சினிமா

சவுதி அரேபியாவில் துணிவு படத்திற்கு தடை..காரணம் இதுதான்..!

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் 11 ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் துணிவு படத்தை சவுதி அரேபியாவில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. திருநங்கைகள் தொடர்பான காட்சி ஒன்று அப்படத்தில் இருப்பதால் அதன் காரணமாக அதனை அங்கு ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் விஜய் நடித்த பீஸ்ட், துல்கர் சல்மான் நடித்திருந்த குரூப், விஷ்ணு விஷால் நடித்த எஃப் ஐ ஆர் போன்ற படங்களுக்கும் அரபு நாடுகளில் தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top