Connect with us

Raj News Tamil

அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை…மேலும் குறைய வாய்ப்பு

வணிகம்

அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை…மேலும் குறைய வாய்ப்பு

கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக, தக்காளி விலை ரூ.200-க்கும் மேல் விற்கப்பட்டது. தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை ரூ.100க்கு கீழ் குறைந்துள்ளது. முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து, ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2-ஆம் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து, ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

More in வணிகம்

To Top