Connect with us

பார்லிமென்டில் பேசிக்கொண்டிருந்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்த எம்.பி..!!

உலகம்

பார்லிமென்டில் பேசிக்கொண்டிருந்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்த எம்.பி..!!

துருக்கி பார்லிமென்டில் எம்.பி ஹசன் பிட்மேஸ் பேசுகையில், ”ஹமாஸ்க்கு எதிராக காசாவில் நடக்கும் போரை இஸ்ரேல் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்” என பேசிக்கொண்டிருக்கும் போதே எம்.பி மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே சரிந்து விழுந்தார்.

உடனடியாக அங்கு சென்ற அவசர உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதையடுத்து அவரை அங்காராவில் உள்ள பில்கென்ட் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பிட்மேஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பார்லிமென்டில் பேசியபோதே அந்நாட்டு எம்.பி., மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

More in உலகம்

To Top