Connect with us

Raj News Tamil

கஷ்ட காலத்திலும் அப்பாவுக்கு துணை நிற்காத விஜய்! SAC மீது அவ்வளவு கோபமா?

சினிமா

கஷ்ட காலத்திலும் அப்பாவுக்கு துணை நிற்காத விஜய்! SAC மீது அவ்வளவு கோபமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள், மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும், குறிப்பிடத்தகுந்த வசூலை பெற்று விடுகின்றன.

அந்த அளவிற்கு, பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பதே, இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது, இவ்வளவு மாஸான ஹீரோவாக விஜய் இருக்கலாம். ஆனால், ஆரம்பக் காலத்தில், பல்வேறு விமர்சனங்களை பெற்றிருக்கிறார்.

இத்தனை விமர்சனங்களை மீறி அவர் வெற்றி பெற்றதற்கு, கடின உழைப்பு ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், அவரது தந்தையும் பெருமளவில் உதவியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

இவ்வாறு தனது ஆரம்பக் காலங்களில் உறுதுணையாக இருந்த தந்தையை, விஜய் ஒதுக்கி வைத்துள்ளாராம். இந்த தகவலை ஒரு பக்கம் விஜய் தரப்பினர் மறுத்தாலும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், சமீபத்தில் மருத்துவரை சந்தித்துள்ளார். அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யச் சொல்லி, அறிவுறுத்தியுள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்டு, அவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அறுவை சிகிச்சையை செய்துள்ளார். தற்போது, நலமாக இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

இவ்வளவு விஷயங்கள் தந்தைக்கு நடந்தபோதிலும், விஜய் தனது தந்தையை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு இதுவரை செல்லவில்லை. ஏனென்றால், அவர் இப்போது தான், அமெரிக்காவில் இருந்தே சென்னைக்கு வந்துள்ளாராம்.

தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யும் நேரத்திலும், அவரை பார்க்க விஜய் வராமல் உள்ளாரே என்று, ரசிகர்கள் கூறி வருகின்றனர். தனது தந்தை மீது விஜய் அவ்வளவு கோபத்தில் உள்ளாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More in சினிமா

To Top