Connect with us

Raj News Tamil

“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்” – வைரலாகும் விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு

சினிமா

“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்” – வைரலாகும் விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒட்டு மொத்த திரையுலகமும் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது X வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “அன்பு நெஞ்ஜங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.

அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்.” என அந்த பதிவில் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top