Connect with us

Raj News Tamil

முதியவரிடம் ஆபாச வீடியோவை காட்டி 82 லட்ச ரூபாய் பறித்த பெண்கள்

இந்தியா

முதியவரிடம் ஆபாச வீடியோவை காட்டி 82 லட்ச ரூபாய் பறித்த பெண்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.82 லட்சம் வரை பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது. இவர் ரீனா அன்னம்மா (40) என்ற பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார். அவர்கள் இருவரும் விடுதி ஒன்றில் அறை எடுத்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதனை அன்னம்மா தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை முதியவரிடம் காட்டி தனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி 82 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளனர்.

இது குறித்து அந்த முதியவர் ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னம்மா மற்றும் சினேகாவை கைது செய்தனர். மேலும் இதற்கு உதவியாக இருந்த சினேகாவின் கணவர் லோகேசையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More in இந்தியா

To Top