Connect with us

Raj News Tamil

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: ஜாம்பியாவை அடித்து நொறுக்கியது ஜப்பான்!

விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: ஜாம்பியாவை அடித்து நொறுக்கியது ஜப்பான்!

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் மற்றும் ஜாம்பியா அணிகள் மோதின இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் வென்றது.

தொடக்கம் முதலே ஜப்பான் ஆட்டத்தை தன் கட்டுபாட்டிலே வைத்து கொண்டது. 43வது நிமிடத்தில் ஜப்பானின் மியாஸவா தமது அணிக்காக முதல் கோலை பதித்தார்.

அதனைத் தொடர்ந்து 55வது நிமிடத்தில் மினா டனக்கா கோல் அடித்தார். அடுத்த 7 நிமிடங்களில் ஹினடா மீண்டும் அசத்தலாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஜுன் எண்டோ தனியாக பந்தை விரட்டிச் சென்று கோலாக மாற்றினார்.

90 நிமிடங்கள் முடிந்த பின்னரும் ஜாம்பியா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

கடைசி நிமிடத்தில் ஜாம்பியா கோல் கீப்பர் கேத்தரின் முஸோண்டா எதிரணி வீராங்கனையை தடுக்க முயன்றதால் அவர் கீழே விழுந்தார். இதனால் ஜப்பானுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அத்துடன் கேத்தரின் முஸோண்டாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வந்த கோல் கீப்பர் எயூனிஸ் சகலாவினால் ஜப்பான் வீராங்கனை ரிகோவின் ஷாட்டை தடுக்க முடியவில்லை.

இதனால் ஜாம்பியா அணி 0-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி அடைந்தது.

More in விளையாட்டு

To Top