Connect with us

Raj News Tamil

ஜப்பான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்த இந்திய தூதரகம்..!

உலகம்

ஜப்பான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்களை அறிவித்த இந்திய தூதரகம்..!

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் வசிக்கும் இந்திய மக்களுக்காக உதவி எண்களை, இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி +81-80-3930-1715, +81-70-1492-0049, +81-80-3214-4734, +81-80-6229-5382, +81-80-3214-4722 என்ற உதவி எண்களிலும், [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

More in உலகம்

To Top