Connect with us

Raj News Tamil

உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. முதல் பாதி ஓவர்.. இந்தியா நிர்ணயித்த இலக்கு என்ன?

விளையாட்டு

உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. முதல் பாதி ஓவர்.. இந்தியா நிர்ணயித்த இலக்கு என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, பேட்டிங் ஆடிய இந்திய அணி, அதிரடியாக தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆனால், அந்த ஆட்டம் சில நிமிடங்களிலேயே, ஆஸ்திரேலிய அணியால், முடக்கப்பட்டது.

வெறும் 7 ரன்களில், சுப்மன் கில் அவுட்டாகினார். இதையடுத்து, களமிறங்கிய விராட் கோலி, நிதானமாக விளையாடி, கெஞ்சம் கொஞ்சமாக ரன்களை சேர்த்து வந்தார். இதற்கிடையே, ரோஷித் சர்மா 47-வது ரன்னில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய, கே.எல்.ராகுல், விராட் கோலி கூட்டணி, விக்கெட்டை இழக்காமல் இருந்தால் தான், வெற்றி பெற முடியும் என்று எண்ணி, நிதானமாக ஆட ஆரம்பித்தனர். இவ்வாறு போட்டி பொறுமையாக கடக்க, 54-வது ரன்னில் கோலி நடையை கட்டினார்.

இதன்பிறகு, கே.எல்.ராகுலையும், ஸ்ரேயஸ் ஐயரையும், ஜடேஜாவையும், சூர்ய குமார் யாதவையும் தான், ஒட்டுமொத்த அணியும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், ஸ்ரேயஸ் ஐயர், ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு, அணியின் கவனம் அனைத்தும், கே.எல்.ராகுல் மீதும், சூர்ய குமார் யாதவ் மீதும் தான், இருந்தது. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல், 107 பந்துகளுக்கு 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும், சூர்ய குமாரிடம் இருந்தும் பெரும் ஆட்டம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும், 28 பந்துகளுக்கு, 18 ரன்கள் தான் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், தட்டுத்தடுமாறி, 50 ஓவர்கள் முடிவில், 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்திய அணி, 240 ரன்களை எடுத்தது.

தற்போது, 241 ரன்கள் என்ற இலக்குடன், ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. 280 ரன்கள் வரை, டார்கெட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஆனால், கிரிக்கெட் வரலாறு, எப்போதும், த்ரில்லர் படங்களை காட்டிலும், அதிக விறுவிறுப்பாகவும், திருப்பங்களுடன் இருக்கக் கூடியது என்பதால், இறுதியில் என்ன வேண்டுமானாலும், நடக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

More in விளையாட்டு

To Top