Connect with us

Raj News Tamil

குழந்தைகளுக்கு கூட உணவு இல்லை: மணிப்பூா் மக்களை சந்தித்த கனிமொழி பேட்டி!

அரசியல்

குழந்தைகளுக்கு கூட உணவு இல்லை: மணிப்பூா் மக்களை சந்தித்த கனிமொழி பேட்டி!

மத்திய அரசு அறிந்து கொள்ளவேண்டிய பலவிவரங்களை அம்மாநில மக்கள் எங்களிடம் கூறியுள்ளனா் என்று திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவா் கனிமொழி தெரிவித்தார்

21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். இதையடுத்து, கோரிக்கை மனுவை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர். பின்னர் நேற்று அந்த குழு டெல்லி திரும்பியது.

மணிப்பூருக்கு சென்று வந்த பிறகு, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:

முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களைச் சந்தித்தோம். அவா்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போகக் கூடிய நிலை இல்லாமல் மோசமான சூழ்நிலையில் அச்சத்தில் உள்ளனா்.

முகாம்களில் உள்ள மக்களுக்கும் உணவுத் தட்டுப்பாடு. குழந்தைகளுக்கு கூட உணவு இல்லை. மருத்துவ வசதியும் இல்லை. நாங்கள் சனிக்கிழமை பிஷ்ணுபூா் என்கிற பகுதியிலுள்ள முகாம்களுக்கு சென்று திரும்பி வரும்போது கூட மக்கள் சாலைகளில் தா்ணாவில் ஈடுபட்ட வந்தனா். அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மாணவா்கள் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. குறைந்த பட்சம் இணைய வசதி கூட இல்லாத நிலையில், நிகழாண்டு கல்வியை இழந்துவிடும் சூழ்நிலையில் உள்ளனா். மருத்துவக் கல்லூரி மாணவா்களும் போராட்டத்தில் உள்ளனா். எந்த தரப்பினரும் அரசின் மீது நம்பிக்கையுடன் இல்லை. முதல்வரோ, அமைச்சரோ மக்களைச் சந்திப்பதில்லை. போராடும் மக்கள், ’மினிஸ்ட்டா் மிஸ்ஸிங்’, ‘எம்எல்ஏ மிஸ்ஸிங்’ போன்ற பதாகைகளை ஏந்தியவாறு உள்ளனா்.

ராணுவம் எல்லா இடங்களிலும் இருப்பதால் ஒரு அமைதி இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், அமைதியில்லை. பிரச்னைக்குரிய மைத்தேயி, குகி ஆகிய இரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வன்முறையை தடுக்க அரசு முயற்சிக்கவில்லை என்கின்றனா். இதனால், அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி நிரந்தரமாக அமைதி திரும்ப மத்திய அரசோ, மாநில அரசோ முயற்சித்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை. பாலியியல் வன்கொடுமைக்குள்ளான இரு பெண்களின் குடும்பதினரையும் பெண் எம்பிக்கள் மட்டும் சென்று சந்தித்தோம். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் தன்னுடைய கணவரை இழந்துள்ளார். கைவிட்ட காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி வருந்தினார்.

தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு பெண்களின் தாயார்களும் தைரியமாகச் பேசினா். இப்படி பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து பேசி உணா்ந்து கொண்ட விஷயங்கள் ஏராளமாக உள்ளன. மத்திய அரசு அறிந்து கொள்ளவேண்டிய பலவிவரங்களை அம்மாநில மக்கள் எங்களிடம் கூறியுள்ளனா்.

இவற்றை அரசு அறிந்து கொள்ளும் வகையில், இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதை அரசு ஏற்றுக்கொண்டு அனுமதியளித்து பிரதமரும் பதிலளிக்க வேண்டும் என்றார் கனிமொழி.

More in அரசியல்

To Top