Connect with us

Raj News Tamil

5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!!

அரசியல்

5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு..!!

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநில சட்டசபைகளின் ஆட்சிக்காலம் வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி என அடுத்த சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. . நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமா இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 5 மாநில தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தற்போது முறைப்படி அறிவித்துள்ளார். அதன்படி மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி, சட்டீஸ்கரில் நவம்பர் 7 & 17, மத்திய பிரதேசம் நவம்பர் 7 -ம் தேதி, ராஜஸ்தான் நவம்பர் 30-ம் தேதி, தெலங்கானா நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top