சினிமா
விடுதலைக்கு பின் 5 படங்களில் ஹீரோவாக நடிக்கும் சூரி! செம ஜாக்பாட்!
வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது. குறிப்பாக, நடிகர் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதன்காரணமாக, இவருக்கு எதிர்காலத்தில் ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வரை 5 படங்களில், ஹீரோவாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கொட்டுக் காளி, ஏழு மலை எழு கடல் ஆகிய படங்களில் சூரி நடித்து முடித்துள்ளார். தற்போது, விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகிய படங்களிலும், அவர் நடித்து வருகிறார். வெற்றிமாறன் படத்தில் சூரியின் நடிப்பு திறமையை பார்த்த மற்ற இயக்குநர்கள், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தயார் செய்து, சூரியை அனுகி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login