உடலுறவுக்கு நோ சொன்ன மனைவி.. விவாகரத்து செய்த கணவன்..

இன்றைய காலகட்டத்தில், தம்பதிகள் விவாகரத்து செய்வது மிகவும் சாதாரண விஷயமாக பார்க்கப்படுகிறது. இது வருத்தம் அளிக்கக் கூடிய விஷயமாக இருந்தாலும், ஒத்து வராத உறவை துன்பத்துடன் தொடர்வதை விட, பிரிந்துவிடுவது மேல் என்று பலரும் இந்த முடிவை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உடலுறவுக்கு ஒத்துழைக்காத பெண் ஒருவரை விவாகரத்து செய்வதற்கு, அவரது கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதற்கு நீதிபதி கொடுத்த தீர்ப்பு குறித்து தற்போது பார்க்கலாம்.. அதாவது, டெல்லியை சேர்ந்த இருவர், கடந்த 2014-ஆம் ஆண்டு அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவகாரத்து செய்வதற்கு முடிவு செய்தார். அதன்படி, டெல்லி குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்துக் கோரி, வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், உடலுறவுக்கு இந்த பெண் சம்மதிக்க மறுக்கிறார் என்று வாதாடினார். இதையடுத்து, வாதாடிய பெண் தரப்பு வழக்கறிஞர், உடலுறவு என்றாலே அச்சத்திற்கு ஆளாகும் ஜீனோபோபியா நோய் அந்த பெண்ணுக்கு இருப்பதாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “இயல்பான ஆரோக்கியமான பாலியல் உறவு என்பது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் அடிப்படை அங்கமாகும். வேண்டுமென்றே தனது இணையுடன் பாலியல் உறவை தவிர்ப்பது என்பது மற்றொரு நபரை மன ரீதியான கொடுமைக்கு ஆளாக்கும் செயல்.

குறிப்பாக இருவரும் இளம் ஜோடியாக இருக்கின்றீர்கள். சுயமாக தனது கணவரை தேர்வு செய்து திருமணத்திற்கு முன்பு பேசி அறிமுகமான பின்னர் குடும்ப வாழ்க்கையில் பாலியல் உறவை தவிர்பதை ஏற்க முடியாது” என்ற நீதிபதி, கணவரின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து கொடுத்து தீர்ப்பளித்தார்.

RELATED ARTICLES

Recent News