5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது!

5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரியை திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், காதர்பேட்டை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதேவி, 46. இவர் கடந்த இரு மாதம் முன், உதவி துவக்க கல்வி அலுவலராகப் பணி உயர்வு பெற்று ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நியமிக்கப்பட்டார். இதற்காக, 2006ம் ஆண்டு முதல் திருப்பூரில் அவர் பணியாற்றியது உட்பட பணி வரன்முறை செய்த ஆவணங்கள் பெற்று ஈரோடு மாவட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இந்த சான்றுகளை பெற, திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், அமுதா, 59, என்பவரிடம் விண்ணப்பித்தார்.

சான்று வழங்க, அமுதா, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து ஸ்ரீதேவி, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆலோசனைப்படி, நேற்று காலை கே.எஸ்.சி., பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் (தொடக்க கல்வி) அறையில், லஞ்ச பணத்தை அமுதாவிடம் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் சசிரேகா மற்றும் போலீசார் அமுதாவை கைது செய்தனர். தற்போது, லஞ்சம் வாங்கி கைதான அமுதா, பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில மாதங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News