Connect with us

Raj News Tamil

ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கானா பாடல்! ரசிகர்கள் ஆச்சரியம்!

சினிமா

ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கானா பாடல்! ரசிகர்கள் ஆச்சரியம்!

சிங்கத்த போட்டோ-ல பாத்திருப்ப, சினிமாவுல பாத்திருப்ப, டிவி-ல பாத்திருப்ப, ஏன் கூண்டுல கூட பாத்திருப்ப.. ஆனா கம்பீரமா காட்டுல நடந்து பாத்திருக்கியா? வெறித்தனமா தனியா நின்னு வேட்டையாடி பாத்திருக்கியா? என்று நடிகர் சூர்யா வசனம் ஒன்றை பேசியிருப்பார்.

அந்த வசனத்துக்கு ஏற்றார்போல், ஏ.ஆர்.ரகுமான், மெலடி பாடல்கள் இசையமைத்து கேட்டிருப்போம், தத்துவ பாடல்கள் இசையமைத்து கேட்டிருப்போம், குத்து பாடல் இசையமைத்து கூட கேட்டிருப்போம்.

ஆனால், வடசென்னை பாணியிலான கானா பாடலை, அவர் இசையமைத்து கேட்டதே இல்லை. ஆனால், அதை கேட்பதற்கான நாள் தற்போது வந்துவிட்டது. அதாவது, ராயன் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடல், நாளை வெளியாக உள்ளது.

இந்த பாடலின் அறிவிப்பை, அப்படத்தின் இயக்குநர் தனுஷ், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அதில், ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து ஒரு கானா பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள், அப்பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More in சினிமா

To Top