Connect with us
Raj News Tamil

Raj News Tamil

மகளிர் சுயமரியாதையோடும் வாழ கொண்டு வரப்பட்ட திட்டம்- முதல்வா் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

மகளிர் சுயமரியாதையோடும் வாழ கொண்டு வரப்பட்ட திட்டம்- முதல்வா் மு.க.ஸ்டாலின்!

மகளிர் தன்னம்பிக்கையோடும் சுயமரியாதையோடும் வாழ கொண்டு வரப்பட்ட திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தருமபுரி மாவட்டம் தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிா் உரிமைத் தொகை முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தொப்பூரில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையை வந்தடைந்து முதல்வர் உரையாற்றினார்.

அப்போது, கடும் நிதி நெருக்கடியிலும் மகளிருக்கான கட்டணமில்லை பேருந்து சேவை திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் நாள்தோறும் 36 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர்.

பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உழைக்கிறோம்.

மகளிர் தன்னம்பிக்கையோடும் சுயமரியாதையோடும் வாழ கொண்டு வரப்பட்ட திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

34 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுக்களை கருணாநிதி தருமபுரியில் தொடங்கி வைத்தார். தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுவதும் விளையும் என்ற நம்பிக்கையில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முகாமை தொடங்கியுள்ளோம்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மூலம் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கிடைக்கப்போகிறது. இந்த திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழக்கூடிய திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top