Connect with us

Raj News Tamil

கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து…..சூர்யாவுக்கு என்னாச்சு??

சினிமா

கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து…..சூர்யாவுக்கு என்னாச்சு??

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘கங்குவா’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கங்குவா படத்தின் சண்டைக்காட்சிகள் நடைபெற்று வந்தது. அப்போது ரோப் கேமராவின் ஒரு பகுதி அறுந்து விழுந்தது. இதை பார்த்ததும் சக சண்டை பயிற்சியாளர்கள் சத்தம் போட்டதையடுத்து சூர்யா அங்கிருந்து விலகியுள்ளார்.

இருப்பினும் இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top