Connect with us

Raj News Tamil

நடிப்புக்கு Bye Bye சொன்ன அதிதி ஷங்கர்?

சினிமா

நடிப்புக்கு Bye Bye சொன்ன அதிதி ஷங்கர்?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி, விருமன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு, மாவீரன் என்ற படத்தில், நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன்பிறகு, ஒருசில படங்களில் அவர் கமிட்டானதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், Doctor.A என்று கேப்ஷன் வைத்து, மருத்துவர் உடையை அணிந்துள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சினிமாவில் இருந்து விலகி, மீண்டும் மருத்துவ தொழிலுக்கே அவர் சென்றுவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More in சினிமா

To Top