சினிமா
கிசுகிசுக்கப்பட்ட நடிகை.. விஜயை ஃபாலோ செய்றாங்க.. கொழுத்திப் போட்ட நெட்டிசன்கள்..
தளபதி விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடர்ந்திருந்தார். கணக்கு தொடங்கிய 99 நிமிடங்களிலேயே 1 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று, பெரும் சாதனையையும் படைத்திருந்தார்.
இதுமட்டுமின்றி, இவர் வெளியிட்டிருந்த பதிவும் வெளியான 24 மணி நேரத்தில் 4 மில்லியன் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், விஜயின் இன்ஸ்டாகிராம் தொடர்பான இன்னொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜயின் இன்ஸ்டா கணக்கை, முதன்முதலில் ஃபாலே செய்த பிரபலம் யார் என்றால், அது நடிகை கீர்த்தி சுரேஷ் தான். இந்த தகவல், இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜயும், கீர்த்தி சுரேஷ்-ம், சர்க்கார், பைரவா ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்பதும், இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிசுகிசுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login