Connect with us

Raj News Tamil

அதிக மாசடையும் காற்று.. நீரழிவு நோய் ஏற்படும்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..

ஆரோக்கியம்

அதிக மாசடையும் காற்று.. நீரழிவு நோய் ஏற்படும்.. அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..

இந்தியாவை ஆட்டிப் படைக்கும் நோய்களில் ஒன்றாக இருப்பது நீரழிவு நோய். முன்பெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டும் வந்துக் கொண்டிருந்த இந்த நோய், தற்போது அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரிட்டிஷ் மருத்துவ இதழ் ஒன்றில், இந்தியா சார்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அசுத்தமான காற்றை சுவாசிப்பதால், டைப் 2 நீரழிவு நோய், ரத்த அழுத்தம் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, டெல்லி மற்றும் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறிய விவரம் பின்வருமாறு:-

“இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கு, அசுத்தமான காற்று தான் காரணம் என்று கூறப்பட்டது. என்னதான் இருந்தாலும், இதுதொடர்பான ஆதாரங்கள் அனைத்தும், குறைவான மாசு உள்ள பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருந்தன.

எனவே, தொற்றாத நோய்களின் தாக்கம் அதிகம் உள்ள, இந்தியா மாதிரியான அதிக மாசு உள்ள நாட்டில் இருந்து, ஆதாரங்கள் தேவைப்பட்டது. எனவே, ஆராய்சியாளர்கள் 12 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்தனர்.

மேலும், 2010-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையில், அவர்களது ரத்த அழுத்தம் கணக்கெடுக்கப்பட்டது. மேலும், செயற்கைகோள்களின் உதவியுடன், அவர்கள் அனைவரும் வசிக்கும் பகுதிகளில், காற்றின் மாசு எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிந்தனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, PM2.5 என்ற அளவில் காற்று மாசு இருந்த இடத்தில் ஒருமாத காலமாக வசித்தவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.

மற்றும் ஒரு வருடமாக, இதே அளவில் மாசடைந்த காற்றை சுவாசித்தவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள், பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More in ஆரோக்கியம்

To Top