Connect with us

Raj News Tamil

ஐஸ்வர்யா ராயை கட்டிபிடித்த சல்மான் கான்? அதிர்ச்சி தரும் புகைப்படம்!

சினிமா

ஐஸ்வர்யா ராயை கட்டிபிடித்த சல்மான் கான்? அதிர்ச்சி தரும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவரும், நடிகை ஐஸ்வர்யா ராயும், நெருங்கி காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில், நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் மனிஷ் மல்கோத்ரா, தீபாவளி பண்டிகையையொட்டி, விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகைககள் பலரும் கலந்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை, இணையவாசி ஒருவர் வெளியிட்டிருந்தார்.

அதில், பிங்க் நிற சுடிதார் அணிந்த பெண் ஒருவரை, சல்மான் கான் கட்டிப்பிடிப்பது போல் குறிப்பிட்ட புகைப்படம் ஒன்று இருந்தது.

இதனை பார்த்த ரசிகர்கள், அது ஐஸ்வர்யா ராய் என்றும், மனிஷ் மல்கோத்ராவின் விருந்தில், அவர் தான் பிங்க் நிற சுடிதார் அணிந்திருந்தார் என்றும், பல்வேறு யூகங்களை கூறி வந்தனர். இது மற்ற ரசிகர்களிடையே, பல்வேறு வகையான கமெண்ட்ஸ்களை பெற்றது.

இறுதியில், துப்பறிவாளர்களாக மாறிய வேறு சில நெட்டிசன்கள், அது ஐஸ்வர்யா ராய் இல்லை என்றும், பாலிவுட் நடிகர் சூரஜ் பாஞ்சாலியின் சகோதரி சனா பாஞ்சாலி என்பது தெரியவந்தது.

More in சினிமா

To Top