Connect with us

Raj News Tamil

அஜித் மிஸ் பண்ண மிரட்டலான திரைப்படம்.. நடிச்சிருந்தா பாகுபலியை மிஞ்சிருக்கும்..

சினிமா

அஜித் மிஸ் பண்ண மிரட்டலான திரைப்படம்.. நடிச்சிருந்தா பாகுபலியை மிஞ்சிருக்கும்..

குறும்பு என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்னு வர்தன். இந்த படத்திற்கு பிறகு, அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் என்ற பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார்.

இதையடுத்து, நடிகர் அஜித்துடன் கூட்டணி வைக்க முயற்சி செய்தார். அந்த திரைப்படம், ராஜா ராஜா சோழன், தஞ்சை பெரிய கோயிலை கட்டியது தொடர்பாக எடுக்கப்பட இருந்தது.

ஆனால், அஜித்தின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக, அப்படம் தொடங்கப்படாமலே இருந்தது. இதற்கிடையே, இந்தி படத்தை எடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால், அவர் அங்கு பிசியாகிவிட்டார்.

இவ்வாறு இருவரும் தனித்தனியாக திரைப்படங்கள் கமிட்டானதால், அந்த வரலாற்றுத் திரைப்படம் எடுக்க முடியாமலே போய்விட்டது. அந்த காலத்திலேயே 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கலாம் என்று பேச்சுவார்த்தையும் நடந்துக் கொண்டிருந்தது.

இந்த திரைப்படம், உண்மையிலேயே உருவாகியிருந்தால், பாகுபலி அளவுக்கு வெற்றியை பெற்றிருக்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top