Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பாஜக பிரமுகரிடம் பண மோசடி செய்த இன்னொரு பாஜக பிரமுகர்..!!

இந்தியா

பாஜக பிரமுகரிடம் பண மோசடி செய்த இன்னொரு பாஜக பிரமுகர்..!!

புதுச்சேரி அருகே ஏம்பலம் நத்தமேடு என்ற பகுதி உள்ளது. இங்கிருக்கும் கோவில் தெருவைச் சோ்ந்தவர் காத்தவராயன். பாஜக பிரமுகரான இவர் அரசு வேலையில் சேருவதற்காக தனக்கு தெரிந்த பாஜகவின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் காதவராயனுக்கு சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகரான 40 வயதான அறிவழகன் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. இவர் காத்தவராயனிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக கடந்த கடந்த 2020 ம் ஆண்டில் ரூ.15.90 லட்சத்தை காத்தவராயன் செலுத்தியுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அறிவழகன் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளார். மேலும் அறிவழகன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் தன்னிடம் இருந்து ரூ.15.90 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையத்தில் காத்தவராயன் புகார் அளித்தார்.

இதையடுத்து அறிவழகன் மற்றும் அவருடைய மனைவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top