Connect with us

Raj News Tamil

“பொய்களை உருவாக்கும் தொழிற்சாலை நடத்தும் பாஜக”

இந்தியா

“பொய்களை உருவாக்கும் தொழிற்சாலை நடத்தும் பாஜக”

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சண்டிகர் தொகுதியின் வேட்பாளருமான மனிஷ் திவாரி, நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களிடம், இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ANI செய்தி நிறுவனத்திற்கு, அவர் பேட்டி அளித்தார். அதில் பேசியது பின்வருமாறு:-

“நானும், என்னுடைய பிரச்சார அணியும், சுக்னா ஏரிக்கு அருகில், வாக்கிங் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

அங்கு, வரும் உள்ளூர் மக்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடவும் முடிவு செய்தோம். நாங்கள், அங்குள்ள மக்களிடம் இருந்து அதிகப்படியான அன்பையும், பாசத்தையும் பெற்றோம்.” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசும்போது, பாஜகவின் பிரச்சார வாசகமான, “ இந்த முறை 400 இடங்களுக்கும் மேல்” என்பதை கிண்டலடித்த திவாரி, “தென்னிந்தியாவில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும். வட இந்தியாவில் வெற்றி பெறும் எண்ணிக்கை, பாதியாக குறையும். 150 இடங்களை வெல்வதையே, அவர்கள் அதிர்ஷ்டமாக கருத வேண்டும். வரும் ஜூன் 4-ஆம் தேதி அன்று, இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதால், மத்தியில் ஆளும் பாஜக கட்சி தூக்கி எரியப்படுவார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொய் மற்றும் வதந்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை, சமூக வலைதளங்களில் பாஜக நடத்தி வருகிறது. அது பொய்களை விற்பனை செய்ய வரும்போது, யாராலும், அதனுடன் போட்டி போட முடியாது” என்றும் கடுமையாக தாக்கினார்.

முன்பு பாஜகவின் கூட்டணியில் இருந்துவிட்டு, தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், ஷீரோமணி அகலி டால் ( Shiromani Akali Dal (SAD) ) என்ற கட்சி, வெளியேறியிருந்தது.

இந்த கட்சி, தற்போது மத்திய விசாரணை அமைப்புகளின், விசாரணை வளையத்திற்குள் இருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகிய 3 அமைப்புகளின் பலங்களை பயன்படுத்தி, பாஜக தேர்தலை சந்திக்கிறது என்பது உண்மை தான்.

மிகவும் அப்பட்டமான முறையில், இந்த 3 விசாரணை அமைப்புகளையும் பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது. இதனை தேர்தல் ஆணையம் கவனிக்காமல் இருப்பது, துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் கூறினார்.

More in இந்தியா

To Top