Connect with us

Raj News Tamil

அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்

சினிமா

அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

2016ல் வெளியான இப்படமும் வெற்றிபெற்றது. இதனையடுத்து, 2021-ல் அரண்மனை படத்தின் 3-ம் பாகம் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் தேதி மாற்றப்பட்டது. தற்போது ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top