Connect with us

Raj News Tamil

ஜேம்ஸ் கேமரூனையே பிரம்மிக்க வைத்த தமிழ் திரைப்படம்! வியப்பில் ரசிகர்கள்!

சினிமா

ஜேம்ஸ் கேமரூனையே பிரம்மிக்க வைத்த தமிழ் திரைப்படம்! வியப்பில் ரசிகர்கள்!

டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் உள்ளிட்ட படங்களின் மூலம், உலகம் முழுவதும் பெரும் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். சமீபத்தில் இவர் இயக்கி இருந்த அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம், 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து, சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், இவர் RRR படத்தை பார்த்துவிட்டு, பிரம்மித்து போனதாக, இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஜேம்ஸ் கேமரூன் RRR படத்தை பார்த்ததாகவும், முதல் முறை படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன், படம் நன்றாக இருந்ததால், தனது மனைவிக்கு பரிந்துரைத்து, பின்னர், மனைவியுடன் அமர்ந்து, 2-வது முறை அந்த படத்தை பார்த்துள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

மேலும், படம் குறித்து 10 நிமிடங்கள் தன்னிடம் அவர் பேசியதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உலகையே வியக்க வைத்த ஹாலிவுட் இயக்குநரை, தென்னிந்திய இயக்குநர் ஒருவர் வியக்க வைத்துள்ளது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top