Connect with us

Raj News Tamil

தீபாவளி ரேஸில் இணைந்த பிரபல இயக்குநர்! ஹீரோ யார்?

சினிமா

தீபாவளி ரேஸில் இணைந்த பிரபல இயக்குநர்! ஹீரோ யார்?

தீபாவளி பண்டிகை அன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த தீபாவளி பண்டிகை அன்று, அயலான், ஜிகர்தண்டா 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது.

ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, இன்னொரு பெரிய இயக்குநரின் திரைப்படமும் ரிலீசாக உள்ளது. அதாவது, இயக்குநர் பாலா, வணங்கான் என்ற படத்தை, சூர்யாவை வைத்து, இயக்கி வந்தார்.

சில பிரச்சனைகளின் காரணமாக, அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. தற்போது, அந்த படத்தை, அருண் விஜயை ஹீரோவாக வைத்து, இயக்கி வருகிறார்.

எப்படியாவது இந்த படத்தை ஹிட்டாக்க வேண்டும் என்று, தீவிரமாக பாலா உழைத்து வருகிறாராம். இந்நிலையில், இந்த படம், வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top